சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என கருத்து தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.
கொச்சியில் நடைபெற்று வரும் சிறிய அளவிலான ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் பங்கேற்று, தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து வருகின்றன.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஷாம் கரன் 18.5 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார். கேமெரூன் க்ரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 17.5 கோடிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது அதிகபட்சமாக பென் ஸ்டாக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இது குறித்து பேசுகையில், “எங்களுக்கு சிறந்த ஆல்ரவுண்டர் ஒருவர் தேவை. அதை குறிக்கோளாகக் கொண்டுதான் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றோம். எங்களுக்கு ஸ்டோக்ஸ் கிடைத்துவிட்டார்.” என பேட்டியளித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டதால் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்திருக்கின்றனர்.
40 வயதை எட்டியுள்ள தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்று பேசப்படுகிறது. கடந்த வருடமே கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டு சக வீரராக ஆடினார். நடுவில் சில குழப்பங்கள் நிலவியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார். 2023ல் அவரே கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவதாக கூறிவிட்டார்.
ஒருவேளை தோனி அடுத்த வருடம் விளையாடவில்லை என்றால், வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. ஐபிஎல் ஏலத்திலும் அதை குறி வைத்து களமிறங்கியது என்றே கூறலாம்.
அந்த வகையில் பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். இதனை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்கால கேப்டன் கிடைத்துவிட்டார் என கருத்து தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.
சுரேஷ் ரெய்னா பேசியதாவது: ரகானே மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் ஏற்கனவே தோனியுடன் விளையாடி இருக்கின்றனர். இவர்களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். தோனிக்கு கிட்டத்தட்ட இதுதான் கடைசி ஐபிஎல் என்று கூறப்படுவதால், பென் ஸ்டோக்ஸை தோனி வளர்த்து விடுவதற்கு பார்ப்பார்.
ஸ்டோக்ஸ் சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர். இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார். ஆகையால் கேப்டன் பொறுப்பு ஒன்றும் அவருக்கு புதிதல்ல. சிஎஸ்கே அணிக்குள் இருக்கும் கலாச்சாரத்தை அவர் புரிந்துகொண்டால் மட்டும் போதுமானது. சென்னை ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ்க்கு நல்ல வரவேற்பை கொடுக்க தவற மாட்டார்கள்.” என்றார்.
EXCLUSIVE!
Has MS Dhoni chosen his successor in Ben Stokes?
We asked this question to Suresh Raina. Hear what the Chinna Thala has to say about this👀#IPL2023Auction #CSK #BenStokes pic.twitter.com/ot4DjhNFbB
— News18 CricketNext (@cricketnext) December 23, 2022