சூரியகுமார் யாதவ் “மூன்று வித போட்டிகளுக்கான வீரர்” என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் ரவி சாஸ்திரி.
32 வயதான சூரியகுமார் யாதவ், கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். இதுவரை 13 ஒரு நாள் போட்டிகள் மற்றும 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ், ஏற்கனவே பலரின் நம்பிக்கையும் சம்பாதித்து விட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் எடுக்கப்பட்டார். அதை முடித்தவுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோதிய இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு டெஸ்ட் அணியிலும் எடுக்கப்படவில்லை.

தொடர்ச்சியாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக டி20 போட்டிகளில் மிக முக்கிய வீரராக கருதப்பட்டு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல 2022 ஆம் ஆண்டு 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாவும் கிட்டத்தட்ட 900 ரன்கள் அடித்திருக்கிறார். தரவரிசையில் 3வது இடத்திலும் இருக்கிறார்.
ஆஸ்திரேலியா சென்று டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பிடித்து கலக்கி வருகிறார். இப்படி டாப் ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ், “மூன்றுவித போட்டிகளுக்கான வீரர்”, அவரை சீக்கிரம் டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கி பயன்படுத்த வேண்டும்; பல்வேறு அதிசயங்களை நிகழ்த்துவார் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
“சூரியகுமார் யாதவ் மூன்று வித போட்டிகளிலும் விளையாட கூடிய வீரர். எனக்கு நன்றாக தெரியும் டெஸ்ட் போட்டிகளைப் பற்றி பேசும்பொழுது இவர் பெயர் அடிபடாது என்று. ஆனால் இவர் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடுவார். ஐந்தாவது இடத்தில் களமிறங்கி கலக்குவார். சில போட்டிகளில் மிடில் ஆர்டர் பல அதிசயங்களை நிகழ்த்த கூடியவர்.” என்று சூரியகுமார் யாதவ் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. அப்போட்டி முடிந்த பிறகு சூரியகுமார் யாதவை வைத்துக்கொண்டு இத்தகைய கருத்தினை ரவி சாஸ்திரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரவி சாஸ்திரி பற்றியும் சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சூரியகுமார் யாதவ்.
வீடியோ: