நான் எப்பவும் என்னை மாத்திக்க மாட்டேன்; ரோஹித் சர்மா திட்டவட்டம்
டெஸ்ட் போட்டிகளுக்கான தனது பேட்டிங் ஸ்டலை மாற்றிக்கொள்ள எந்த தேவையும் இல்லை என்று இந்திய அணியின் நட்சத்தி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரஹானேவிற்கு பதிலாக களமிறங்கிய ரோஹித் சர்மா, இரண்டு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஹானே களமிறக்கப்பட்டார்.

இதனையடுத்து ரோஹித் சர்மா, ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கு மட்டுமே தகுதியானவர், டெஸ்ட் போட்டிகளுக்கு லாயக்கு இல்லை என்று பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளுக்காக எனது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள எந்த தேவையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS
இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது “எனது பேட்டிங் ஸ்டைலில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும், நான் என்னை முழுமையாக நம்புகிறேன். நேரத்தை பொறுத்து தான் அமைகின்றன நாம் நினைப்பது நடப்பதும் நடக்காததும். நான் பல இக்கட்டான சமயங்களில் அணியின் வெற்றிக்கு கை கொடுத்துள்ளேன், என் மீது குறை சொல்பவர்களை பற்றி நான் கவலை கொள்ள போவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.