இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்னும் இடத்தில் வெடிகுண்டு விபத்து நடந்தது. இதனால் பிசிசிஐ 23வது தேதி அவசர கூட்டத்தை கூட்டியது. 22-ஆம் தேதி இரவில் அந்த இடத்தில வெடிவிபத்து நடந்தது. பிரிட்டனில் ஒரு மோசமான தாக்குதலாகக் இதை கருதப்படுகிறது. இந்த விபத்தில் 22 பேர் பலி மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் இந்தியா கலந்து கொள்வதால் இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளது. இதனால், இந்தியாவிற்கு பாதுகாப்பை அதிகரிக்க உடனடி கூட்டத்தை கூடியது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ). விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மே 24-ஆம் தேதி மாலை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு அணி நிர்வாகி மற்றும் அனைத்து மேலாளர்களும் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் கலந்து கொள்வார்கள் என ABP கூறியது. அந்த கூட்டத்தில் இந்தியாவின் சுற்றுப்பயண அட்டவணை மற்றும் ஹோட்டலுக்கும் ஸ்டேடியம்கும் உள்ள தூரத்தை பற்றி பேச படும் என தெரிகிறது.
மான்செஸ்டர் மற்றும் இந்திய அணி விளையாடும் மைதானத்திற்கு குறைந்த தூரமே உள்ளதால், இந்திய கிரிக்கெட் வாரியம் கவலையில் உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராப்பி பயிற்சி போட்டியில் மே 28ஆம் தேதி நியூஸிலாந்து அணியுடனும் மற்றும் மே 30-ஆம் தேதி வங்கதேச அணியுடன் விளையாடுகிறது.
நம் பக்கத்துக்கு நாடான பாகிஸ்தானுடன் சாம்பியன்ஸ் ட்ராப்பி போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி மோத உள்ளது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவலை அளிக்கிறது. பாகிஸ்தானுடன் விளையாட வேண்டிய தொடரில் இந்திய பங்கேற்கவில்லை மற்றும் இப்போது இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு நடந்திருக்கு.
இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியின் முதல் போட்டியில் ஜூன் 1 அன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. தனது முதல் போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.