சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பெருமையை இழக்கிறது இந்தியா..? மாற்று வழியை யோசிக்கும் ஐ.சி.சி !

சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பெருமையை இழக்கிறது இந்தியா..? மாற்று வழியை யோசிக்கும் ஐ.சி.சி

வரி பிரச்சனை காரணமாக அடுத்த ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த தொடர்களை வேறு நாடுகளில் நடத்த ஐ.சி.சி., யோசித்து வருவதாக தெரிகிறது.

2021ம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரும், 2023ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்,சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ., யில் ஏற்பட்டு வரும் தொடர் குழப்பங்கள், பிரச்சனைகள் மற்றும் வரி பிரச்சனை காரணமாக இந்தியாவில் இந்த இரண்டு தொடர்கள் நடத்துவதில் சிக்கல் எழுத்துள்ளது.

ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் இந்த தொடர்களை இந்தியாவிற்கு பதிலாக இலங்கை அல்லது, வங்கதேசத்தில் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுவருவதாக தெரிகிறது. இது குறித்ததான அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும்.

கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதி போட்டி வரை தகுதி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி., இயக்குநரான முதல் பெண்;

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சியின் முதல் பெண் இயக்குநராக பெப்சி நிறுவன சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சியின் தன்னாட்சி பெற்ற இயக்குநரை தேர்வு செய்வதற்கான வாரியக் கூட்டம் நடைபெற்றது. இதில். இந்திரா நூயியை இயக்குநராகத் தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அவர் வரும் ஜூன் மாதம் பொறுப்பேற்பார். அவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு மேலும் 2 முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க முடியும். அந்தவகையில் அவர் மொத்தம் 6 ஆண்டுகாலம் ஐ.சி.சி இயக்குநராகப் பதவி வகிக்கலாம்.

 

Mohamed:

This website uses cookies.