சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்கவேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், உலக XI அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி மூன்று போட்டி கொண்ட டி20 தொடர் விளையாட சர்வதேச கிரிக்கெட் வாரியம் உறுதி படுத்தியது. இதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
“பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடர உலக XI அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி டி20 தொடர் விளையாடவைக்க திட்டங்கள் போட்டு கொண்டிருக்கிறோம்,” என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தெரிவித்தது.
“பாகிஸ்தான் vs உலக XI அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது,” என மேலும் கூறியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சென்று டெஸ்ட் தொடர் விளையாடியது ஜிம்பாப்வே. 2009-இல் இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் செய்த பிறகு, எந்த டெஸ்ட் அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதில்லை.
பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாட தொடங்க முதலில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து தொடங்கினார்கள். அந்த தொடர் லாஹூரில் சிறப்பாக நடந்தது. அதன் பிறகு, இந்த வருட கடைசியில் உலக XI அணியை அனுப்பி வைக்கிறது ஐசிசி.
பாகிஸ்தானுக்கு வந்து அனைத்து சர்வதேச அணிகளும் வந்து விளையாடவேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
“இந்த வெற்றி எங்களை ஊக்க படுத்தும் மற்றும் அனைத்து அணிகளும் எங்க ஊருக்கு வந்து விளையாடவேண்டும்,” பாகிஸ்தான் கேப்டன் அஹ்மத் கூறினார்.