ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 945 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 893 புள்ளிகளுடன் 2-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து டான் பிராட்மேனின் 961 புள்ளிகளுக்கு நெருக்கமாகச் சென்று 945 புள்ளிகள் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஐ.சி.சி லேட்டஸ்ட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியல்!! 2
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Steve Smith of Australia celebrates after reaching his century during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

கோலி ஓய்வு காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தலைமை வகித்த ரோஹித், பட்டியலில் முதல் முறையாக 800 புள்ளிகளை கடந்து 816 புள்ளிகளுடன் உள்ளார். முன்னதாக, மொஹாலியில் நடைபெற்ற 2-ஆவது ஒருநாள் போட்டியில் அவர் இரட்டைச் சதமடித்தபோது 825 புள்ளிகளை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.ஐ.சி.சி லேட்டஸ்ட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியல்!! 3

இதேபோல், அந்தத் தொடரின் கடைசி ஆட்டத்தில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகர் தவன், ஓரிடம் முன்னேறி 14-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஓய்வில் இருக்கும் கோலி 876 புள்ளிகளுடன் பட்டியலின் முதலிடத்தில் தொடருகிறார்.

பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் யுவேந்திர சாஹல் 23 இடங்கள் முன்னேறி 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மொத்தமாக 6 விக்கெட் வீழ்த்தினார். இதில் கடைசி ஆட்டத்தில் மட்டும் அவர் 3 விக்கெட் எடுத்திருந்தார்.ஐ.சி.சி லேட்டஸ்ட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியல்!! 4

அதேபோல் குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி, முதல் முறையாக 56-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு 45-ஆவது இடத்தில் முதல் முறையாக தடம் பதித்துள்ளார்.

இலங்கை அணியைப் பொருத்த வரையில், பேட்ஸ்மேன்கள் வரிசையில் உபுல் தரங்கா 15 இடங்கள் முன்னேறி 36-ஆவது இடத்துக்கும், நிரோஷன் டிக்வெல்லா 7 இடங்கள் முன்னேறி 37-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சுரங்கா லக்மல் 14 இடங்கள் ஏற்றம் கண்டு 22-ஆவது இடத்துக்கும், ஆல் ரவுண்டர் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 47-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.

ஐ.சி.சி லேட்டஸ்ட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியல்!! 5
Sri Lankan cricket captain Angelo Mathews(L) looks on as Upul Tharanga (R) raises his bat after scoring 50 runs during the 2nd One Day International cricket match at Galle International cricket stadium, Galle, Sri Lanka on Sunday 2nd July 2017 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

ஒருநாள் போட்டி அணிகளுக்கான வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஹட்டனுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள்

961 – டான் பிராட்மேன், 1948
945 – லென் ஹட்டன், 1954
945 – ஸ்டீவ் ஸ்மித், 2017
942 – ஜேக் ஹாப்ஸ், 1912
942 – ரிக்கி பாண்டிங், 2006

தரவரிசைப் பட்டியலில், பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். ஆஷஸ் மூன்றாவது டெஸ்டில் அசத்திய ஹேஸில்வுட் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ஐசிசி – பேட்ஸ்மேன்கள் தரவரிசை

1. ஸ்டீவ் ஸ்மித்
2. விராட் கோலி
3. புஜாரா
4. கேன் வில்லியம்சன்
5. ஜோ ரூட்

ஐசிசி – பந்துவீச்சாளர்கள் தரவரிசை

1. ஜேம்ஸ் ஆண்டர்சன்
2. ரபடா
3. ஜடேஜா
4. அஸ்வின்
5. ஹேஸில்வுட்

ஐசிசி – ஆல்ரவுண்டர்கள் தரவரிசை

1. ஷகிப் அல் ஹசன்
2. ஜடேஜா
3. பென் ஸ்டோக்ஸ்
4. அஸ்வின்
5. மொயீன் அலி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *