வீரர்கள் வேண்டுமானால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் : கபில் தேவ் 1

உலகக்கோப்பை வென்ற முன்னாள் கேப்டன் கபில் தேவ் வீரர்களின் ஓய்வு மற்றும் தற்போதைய இந்திய அணியின் திறமையையும் பற்றிக் கூறியுள்ளார்.

சமீப காலமாக இந்திய அணி அடுத்தடுத்து பல தொடர்களில் விளையாடி வருகிறது. அதுவும் இந்த வருட சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து இந்திய அணி அனைத்து வகையான் போட்டிகளிலும் சேர்த்து 9 தொடர்களில் விளையாடி விட்டது. மேலும், தற்போது இலங்கயுடனான் டெஸ்ட் தொடர் ஆரம்பித்துள்ளது. இன்னும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் உள்ளது.வீரர்கள் வேண்டுமானால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் : கபில் தேவ் 2

கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் ட்ராபிடில் இருந்து, கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சிகர் தவான்  போன்ற முக்கிய வீரர்கள் அனைத்துவிதமான் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். இதிலும் சிகர் தவான் சில தொடரின் முன்னரும் பின்னரும் தனது சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொண்டார்.

ஹர்திக் பாண்டியா கூட இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் ஓய்வு கேட்டுப் பெற்றுக் கொண்டார். விராட் கோலி மற்றும் புவனேஷ்வர் குமார் அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வில்லாமல் ஆடி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் விராட் கோலியிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு எனக்கு ஓய்வு வேண்டுமானால் நானே கேட்டு பெற்றுக் கொள்வேன் எனக் கூறினார்.வீரர்கள் வேண்டுமானால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் : கபில் தேவ் 3

இந்நிலையில், நேற்று (நவ்.20) இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி கடைசி நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் ட்ரா ஆனது. 75க்கு 7 விக்கெட்டை இழந்த இலங்ககை அணி இன்னும் ஒரு 15 நிமிட ஆட்டம் கிடைத்திருந்தால் தவிடு பொடியாகி இருக்கும். இந்த போட்டியி ஆட்ட நாயகன் விருது பெற்ற புவனேஷ்வர் குமார் மற்றும் துவக்க வீரர் சிகர் தவான் ஆகியோர் போட்டி முடிந்ததும், பி.சி.சி.ஐயிம் ஓய்வு கேட்டு பெற்றுக் கொண்டனர்.

இதில் புவனேஷ்வர் குமார் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும், சிகர் தவான் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ஓய்வு கேட்டு பெற்றுள்ளனர். இது குறித்து முன்னாள் இந்திய வீரர் மற்றும் ஜாம்பவான் கபில் தேவ் கூறியதாவது,

கிரிக்கெட் வீரர்கள் மிக அதிகமாக விளையாடுவதாக நினைத்ஹ்டால் அவர்கள் கேட்டு ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். ஒரு சர்வதேச தரம் மிக்க இந்திய வீரருக்கு எப்போது விளையாட முடியும், எப்போது முடியாது என அவருக்கே தெரியும், இதனால், அவர் நினைக்கும் போது ஓய்வு கேட்க வீரர்களுக்கு உரிமை உள்ளது.

கடந்த 10 முதல் 15 வருடங்களாக இந்திய அணி ஒரு அற்புதமான கிரிக்கெட்டை விளையாய்ட் வருகிறது. தற்போது இந்திய நட்டிற்கு ஒரு மிகச்சிறந்த அணி கிடைத்துள்ளது.

எனக் கொஓறினார் கபில் தேவ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *