ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது சாஷாத், மஹேந்திர சிங் தோனி தான் தனது இந்த கீப்பிங் மற்றும் பேட்டிங் க்கு சப்போர்ட் என தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டகாரரான முகமது சாஷாத், சிறப்பாக பேட்டிங் கீப்பிங் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பை தகுதி சுற்றிலும், பங்களாதேஷ் அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடினார். மேலும், கீப்பிங்கிலும் வேகமாக செயல்படுகிறார்.

மேலும், அவர் கூறுகையில், நல்ல உணவும் நீண்ட நேர தூக்கமும் என்னை ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது. இஷார்க்காகவும் தூக்கத்தையும், உணவையும் தியாகம் செய்தது இல்லை என கூறினார்.

தோனி தான் எனது நிலையான சப்போர்ட் அவரது ஆட்டத்தின் யுக்திகளை நானும் உள் வாங்கி அதில் சிலவற்றை நானும் பயன்படுத்தி வருகிறேன். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனல் போட்டி தான் எனக்கு தோனி ஆடியதில் மிகவும் பிடித்தமானது.
பைனல் போட்டியின் இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவைப்படும். அன்று ரம்ஜான் நோன்பு நேரம் வேறு, விரைவில் உணவு அருந்திவிட்டு தூங்க வெண்டும், ஆனால் 5 நிமிடம் வழக்கமான தூக்கத்தை தள்ளிப்போட்டு விட்டு பைனல் ஓவரை பார்த்தேன். அந்த சிக்ஸ் அடித்த தருணம் இன்றும் என் கண்ணிலே நிற்கிறது.

அந்த போட்டிக்கு முன்பு தோனியின் நல்ல நிலையில் இல்லை. நான் அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டு இருந்தேன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று. என் எண்ணம் போல் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் இந்த ஆட்டம் தோனி ஆடியதில் எனக்கு மிகவும் பிடித்த ஆட்டத்தில் ஒன்று.
மேலும், எனக்கு பாலிவுட் ஹீரோக்கள் அஜய் தேவ்கான், ஷாருக்கான் இருவரும் மிகவும் பிடிக்கும். ஹீரோயின்களில் வித்யா பாலன் என்னை மிகவும் கவர்ந்தவர் என கூறினார்.

ஜூன் 14 ம் தேதி துவங்க இருக்கும் இந்தியாவிற்கு எதிரான வரலாறு சிறப்பு மிக்க போட்டியில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறோம், கடுமையான பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.