இது தாண்டா என்னோட கெத்து... கிறிஸ் கெய்லின் மிகப்பெரும் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 1
இது தாண்டா என்னோட கெத்து… கிறிஸ் கெய்லின் மிகப்பெரும் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடியதன் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு, அந்த போட்டியில் மிரட்டல் வெற்றியும் பெற்ற இந்திய அணி, இன்று (11-10-23) நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இது தாண்டா என்னோட கெத்து... கிறிஸ் கெய்லின் மிகப்பெரும் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 2

டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டனான ஷாகிதி 80 ரன்கள் எடுத்தார்.

இதன்பின் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் 47 ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 55 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 35வது ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது தாண்டா என்னோட கெத்து... கிறிஸ் கெய்லின் மிகப்பெரும் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 3

இந்தநிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியுடனான இந்த போட்டியில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா, இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். குறிப்பாக இந்த போட்டியில் 5 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் சர்மா, இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மொத்தம் 555 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா முதல் இடத்தில்  உள்ளார். கிரிஸ் கெய்ல் 553 சிக்ஸர்கள் அடித்திருந்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, தற்போது இதனை ரோஹித் சர்மா முறியடித்து வரலாறு படைத்துள்ளார். இந்த பட்டியலின் முதல் நான்கு இடங்களில் முன்னாள் வீரர்கள் மட்டுமே உள்ளதால், ரோஹித் சர்மாவின் இந்த சாதனையை முறியடிப்பதற்கு நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள்;

ரோஹித் சர்மா – 555 சிக்ஸர்கள்

கிரிஸ் கெய்ல் – 553 சிக்ஸர்கள்

ஷாகித் அப்ரிடி – 476 சிக்ஸர்கள்

பிராண்டன் மெக்கல்லம் – 398 சிக்ஸர்கள்

மார்டின் கப்தில் – 383 சிக்ஸர்கள்

இது தவிர உலகக்கோப்பை தொடரில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தை டேவிட் வார்னருடன் ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். இருவரும் தலா 19 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 20 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்திருந்ததே இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது, இதனை சமீபத்தில் தான் டேவிட் வார்னர் முறியடித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *