இந்தியாவில் எப்படி ஆடனும்னு விராட் கோலி பாத்து சில ஷாட்கள் கத்துக்கிட்டேன் - ஆஸி., வீரர் மார்னஸ் லபுஜானே பேட்டி! 1

நாக்பூர் மைதானத்தில் நான் ஆடிய சில சாட்டுகள் விராட் கோலி இடம் இருந்து கற்றுக்கொண்டது என்று பேசியுள்ளார் மார்னஸ் லபுஜானே.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்தியா 77 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை இழந்து, ஆஸ்திரேலியா அணியை விட 100 ரன்கள் பின்தங்கி உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் மூன்று ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகள் பறிபோனது.

அதன்பிறகு மார்னஸ் லபுஜானே நிறுத்தி நிதானமாக ஆட்டத்தை எடுத்துச் சென்றார். இவருக்கு பக்கபலமாக அனுபவ வீரர் ஸ்மித் இருந்தார். இந்த ஜோடி 82 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு சேர்த்தது.

இந்தியாவில் எப்படி ஆடனும்னு விராட் கோலி பாத்து சில ஷாட்கள் கத்துக்கிட்டேன் - ஆஸி., வீரர் மார்னஸ் லபுஜானே பேட்டி! 2

இந்த ஜோடி ஆட்டத்தை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றுவிடுவார்களோ!  என்ற பதட்டம் நிலவி வந்தபோது, சரியான நேரத்தில் ஜடேஜா மார்னஸ் லபுஜானே விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி 177 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை சுருட்டியது இந்தியா. ஜடேஜா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்தியாவில் எப்படி ஆடனும்னு விராட் கோலி பாத்து சில ஷாட்கள் கத்துக்கிட்டேன் - ஆஸி., வீரர் மார்னஸ் லபுஜானே பேட்டி! 3

இந்தியாவில் முதல்முறையாக விளையாடி வரும் மார்னஸ் லபுஜானே, முதல் டெஸ்டில் இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய அனுபவம் பற்றி முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு பேசினார். அப்போது தனது பேட்டிங் அணுகுமுறைக்கு விராட் கோலி ஒரு காரணம் என்றும் பேசியது ஆச்சரியப்படுத்தியது. லபுஜானே பேசியதாவது:

இந்தியாவில் எப்படி ஆடனும்னு விராட் கோலி பாத்து சில ஷாட்கள் கத்துக்கிட்டேன் - ஆஸி., வீரர் மார்னஸ் லபுஜானே பேட்டி! 4

விராட் கோலி போன்ற வீரர் நான் நன்றாக விளையாடுகிறேன் என்று கூறும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் விராட் கோலியின் பேட்டிங் பார்த்து சில சாட்டுகள் கற்றுக் கொண்டேன். நாக்பூர் மைதானத்தில் அதை நான் பயன்படுத்தி விளையாடியதுபோது எனது உதவியது. நாக்பூர் போன்ற மைதானம் சிறந்த பேட்ஸ்மேன்களை பரிசோதிப்பதற்கு சரியான மைதானம். முறையான டெக்னிக் மற்றும் அணுகுமுறை இருந்தால் இந்த மைதானத்தில் பெரிதாக ஜொலிக்கலாம். துரதிஷ்டவசமாக நான் ஆட்டம் இழந்தது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் பொறுப்புடன் விளையாடுவேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *