அஸ்வின் பழைய ஆட்டத்திற்கு வந்துட்டா இந்திய அணி தான் டெஸ்ட் சாம்பியன்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 1
அஸ்வின் பழைய ஆட்டத்திற்கு வந்துட்டா இந்திய அணி தான் டெஸ்ட் சாம்பியன்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முன்னேறுவதற்கு ரவி அஸ்வின் தான் காரணமாக இருப்பார் என விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தாலும், இந்த போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவி அஸ்வின் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்திய அணி
டெஸ்ட் தொடரின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்ற ஐசிசி தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார். பல மாதங்களுக்கு பின்பு அணியில் இடம் பிடித்த குல்திப் யாதவே எட்டு விக்கெட் வீழ்த்தும்போது ஏன் அஸ்வினால் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது என்ற கேள்வி எழுந்ததால், அஸ்வினின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது.

இதனால் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் ரவி அஸ்வினை நீக்கிவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அஸ்வின் பழைய ஆட்டத்திற்கு வந்துட்டா இந்திய அணி தான் டெஸ்ட் சாம்பியன்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 2

ஆனால் ரவி அஸ்வின் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு கட்டாயம் தேவை என பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரரான ராஜ்குமார் சர்மா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் என்றால், அது ரவி அஸ்வினின் உதவியை வைத்து தான் முன்னேறும் என தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார் சர்மா தெரிவித்ததாவது, “அஸ்வினின் பந்துவீச்சை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர் தான் இந்திய அணியின் No.1 டெஸ்ட் பந்து வீச்சாளர். அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, ஆனால் அவர் மட்டும் பழைய பார்மிற்கு திரும்பி விட்டால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு ஐந்தில் நான்கு போட்டி வெற்றி பெற வேண்டும் என்றாலும் அவரால் வெற்றி பெற்று கொடுக்க முடியும். மேலும் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சமி மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் இந்திய அணியின் மற்றொரு சீனியர் வீரரான அஸ்வின் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுப்பதற்கு இது வசதியாக இருக்கும்” என ராஜ்குமார் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *