வாண்டடாக சிக்கிய ரோஹித் சர்மா... வச்சு செய்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்; மிக மோசமான வரலாறு படைத்தது இந்திய அணி !! 1
வாண்டடாக சிக்கிய ரோஹித் சர்மா… வச்சு செய்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்; மிக மோசமான வரலாறு படைத்தது இந்திய அணி

நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களில் ஆல் அவுட்டாகி மோசமான வரலாறுகளை படைத்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக போட்டியின் முதல் நாள் முழுவதுமாக தடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு மட்டுமே சாதகமாக இருந்த போதிலும் ரோஹித் சர்மா தேவை இல்லாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததை சரியாக பயன்படுத்தி கொண்ட நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வேட்டையும் நடத்தினார்கள்.

யசஸ்வி ஜெய்ஸ்வால் (13) மற்றும் ரிஷப் பண்ட் (20) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்ட முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் என இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் மிக மோசமாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதன் மூலம் 31.2 ஓவரில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்ரி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளதன் மூலம் இந்திய அணி பல்வேறு மோசமான சாதனைகளையும் படைத்துள்ளது. குறிப்பாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் குறைவான ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பட்டியலில் இந்த போட்டி முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *