தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு நியூஸிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது இந்தியா. இதனால், கேப்டனாக மற்றும் வீரராக சிறப்பாக விளையாடி இன்னொரு தொடரை வெல்ல விராட் கோலி காத்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடிய ஒருநாள் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் யுவவேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதால், அவர்களுடைய பந்துவீச்சை அணியில் பார்க்க ஆசையாக இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
முதல் போட்டிக்கு முன்பாக நடந்த பேட்டியில், சிறப்பாக பந்துவீசும் யுஸ்வேந்த்ர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் விக்கெட் டேக்கிங் பவுலர்கள். தேவையான நேரத்தில் விக்கெட்டுகள் எடுத்து கொடுத்து போட்டியை மாற்ற கூடிய திறமை உள்ளவர்கள் என விராட் கோலி தெரிவித்தார்.
அவர்கள் என்ன தான் ரன்னை வாரி கொடுத்தாலும் விக்கெட் எடுப்பதால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இருக்கிறார்கள்.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடரை சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசியதால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம் பிடிக்க திணறுகிறார்கள். கொல்கத்தாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் குல்தீப் யாதவ், அப்பொழுது ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த இறந்தவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் குல்தீப் யாதவ்.
யுஸ்வேந்த்ர சஹாலும் சிறப்பாக பந்து வீசி நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை எடுத்தார். ஒரு போட்டியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த போது தனது பேட்டிங் திறமையையும் காட்டினார் குல்தீப் யாதவ்.