ஸ்டம்பின் பின்னால் இருந்து கோலி மற்றும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் தோனி 1

இந்தியா மறூர்ம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று புனேவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றதும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் போட்டியையே வென்றதாக நினைத்து ‘பேட்டிங், பேட்டிங்’ என முதலில் பேட்டிங்க் செய்தார்.

ஆனால், போட்டி மற்றும் ஆடுகளத்தை நன்றாக அறிந்த விராட் கோலி கண்டிப்பாக ஃபீல்டிங் தான் வேண்டும் என அழகாக எடுத்து, முதலில் பேட்டிங் செய்த் நியூசியை 230 ரன்னில் ஆல் அவுட் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.ஸ்டம்பின் பின்னால் இருந்து கோலி மற்றும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் தோனி 2

இந்திய அணியின் பந்து வீச்சின் போது, இந்திய வீரர்கள் அற்புதமாகவும் உற்சாகமாகவும் ஆடுகளத்தில் பணியாற்றினர். அந்த இடத்தில் முக்கிய பங்காற்றியது            தல தோனி தான். கீப்பராக இருந்து என்ன செய்ய வேண்டுமோ அதனை கணக்கச்சிதமாக செய்தார் தோனி.

அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதில் இருந்து, எதிரணி வீரர்களை குழப்புவது வரை அனைத்திலும் கைதேர்ந்து வேலை செய்தார் தோனி. அவ்வபோது தோனி ஸ்டம்பின் பின்புறம் இருந்து கொடுக்கும் டிப்சுகள் ஆட்டத்திற்கு வழு சேர்ப்பதாகும். அதனை ஸ்டம்பின் மைக்கில் ரெக்கார்ட் செய்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அவற்றி நேற்றை போட்டியின் போது தோனி கொடுத்த அந்த டிப்சுகளை தற்போது பார்ப்போம்.

எப்போதும் 5 அல்லது 6 ஓவருகள் மட்டுமே வீசும் கேதர் ஜாதவ் நேற்று 10 ஓவர்கள் வீசி 31 ரன் மட்டுமே கொடுத்திருந்தார். அதற்க்கு காரணம் தோனி பின்னால் இருந்து எங்கு பந்து வீச வேண்டும் என்று கூறியது ஒன்று.

கேதர் ஜாதவ் பந்து வீசிக் கொண்டிருந்த போது,

“நன்றாக பந்து வீசுகிறாய் கேது, தொடர்ந்து இதே போல் வீசு”

என்று கூறி கேதர் ஜாதவை உற்சாகப் படுத்துகிறார்.

பின்னர், ஒரு நேரத்தில் டாம் லேதம் ஸ்வீப் சாட் ஆடிகொண்டிருக்க, அதனை மாற்றுவதற்க்காக

‘கோலி வட்டத்திற்குல் இரண்டு அல்லது மூன்று ஃபீல்டர்களை கொண்டு வா”

எனக் கூறுகிறார்.

உடனியாக டாம் லேதம் அதே போல் பந்தை தூக்கி வட்டத்திற்கு மேல் ஸ்வீப் ஆட முயற்சிக்கிறார். ஆனால், பந்து பேட்டின் அடியில் சென்று ஸ்டம்புகளை பதம் பார்க்கிறது. தோனி கூறியது போல் வட்டத்திற்குல் ஃபீல்டர்கலை மாற்றவில்லை எனில் டாம் லேதம் அழகாக தரையில் ஸ்வீப் ஆடி ஒடு ரன் அடித்திருப்பார். தோனியின் இந்த சமயோஜித புத்தி அணிக்கு ஒரு நல்ல விக்கெட்டை எடுத்துக்கொடுத்தது.

மீண்டும் கேதார் ஜாதவ் பந்து வீச வரும் போது, டெய்லர் பேட்டிங்க் செய்கிறார். டெய்லரின் பேட்டிங்கை நங்கு அறிந்திருந்த தோனி,

“ஒவ்வொரு மூன்றாவது பந்தையும் இதே போல் வீசு கேதார்”

எனக் கூறி டெய்லருக்கு தாக்குதல் யுக்திகலை ஏற்ப்படுத்துகிறார்.

டாஸ் வென்ற நியூசி., கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, குல்தீப் யாதவ்விற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசி., அணியின் தொடக்க வீரர்களான மார்டின் கப்திலை 11 ரன்னிலும், கார்லின் மன்ரோவை 10 ரன்னிலும் புவனேஷ்குமார் வெளியேற்றினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் இம்முறையும் சொற்ப ரன்னில் அவுட்டானார். அவர் 3 ரன்னில் பும்ராவால் எல்பிடபிள்யூ செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில், நிக்கோல்ஸ் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

231 ரன்கள் என்கிற எளிதான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிர்ச்சி (7 ரன்கள்) தொடக்கம் கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி 29 ரன்களில் (29 பந்துகள்) அவுட் ஆகிவிட, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முன்கூட்டியெ இறக்கப்பட்டார். இவரும் தவானும் மிக பொறுப்புடன் ஆடினார்கள்.ஸ்டம்பின் பின்னால் இருந்து கோலி மற்றும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் தோனி 3

தவான் 68 ரன்களில் (84 பந்துகள்) அவுட் ஆனார். ரன் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் அடுத்து இறக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 30 (31 பந்துகள்) ஸ்வீப் ஷாட்டுக்கு ஆசைப்பட்டு கேட்ச் ஆனார். பின்னர் மாஜி கேப்டன் டோனியுடன் இணைந்து (21 பந்துகளில் 18 ரன்கள்), தினேஷ் கார்த்திக் அணியை வெற்றி பெற வைத்தார்.

46 ஓவர்களில் வெற்றி இலக்கை இந்தியா தொட்டது. 92 பந்துகளை சந்தித்து 64 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் கடைசி வரை அவுட் ஆகவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். இதன் மூலமாக மிடில் ஆர்டர் வரிசையில் தனக்கான இடத்தை அவர் உறுதிப் படுத்தியிருக்கிறார். பவுலிங்கில் அசத்திய புவனேஷ்வர்குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.ஸ்டம்பின் பின்னால் இருந்து கோலி மற்றும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் தோனி 4

ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால், இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. தொடரின் வெற்றி யாருக்கு? என நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published.