வாய்பில்ல ராஜா.. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்த வீரருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்தான் ; காரணத்துடன் விளக்கிய முன்னால் வீரர்..
நியூசிலாந்து அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் உம்ரான் மாலிக்கிர்க்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் நேற்று முன் தினம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், பந்துவீச்சாளர்கள் செய்த தவறினால் இந்திய அணி கடைசி ஒவ்வொரு வரை போராடி வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் பிரேஸ்வெல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை லாவகமாக கையாண்டு மைதானத்தின் நாலு திசைகளிலும் பந்தை சிதறடித்து இந்திய அணியை ஆட்டம் காண வைத்துவிட்டார் என்றே கூறலாம், அந்த அளவுக்கு பிரெஸ்வெல் மிகவும் அதிரடியாக விளையாடி இந்திய ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.
இதனால் இந்த இரண்டாவது ஒருநாள் தொடருக்கான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியிலும் வெகுவாக எழுந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது ஒருநாள் தொடர் குறித்து தங்களுடைய கருத்துக்களை முன்னாள் வீரர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் குறித்து தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர்., நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் தொடரில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பளிக்கப்படாது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிம் ஜாபர் தெரிவித்ததாவது, “நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் உம்ரன் மாலிக்கிற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. அவர் சிறப்பாக விளையாடினாலும், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சர்துள் தாக்குருக்கு மாற்று வீரராக செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் சர்துள் தாக்கூர் அணியில் இருப்பதால் இந்திய அணிக்கு பேட்டிங் ஆப்ஷன் உள்ளது. மேலும் சர்துள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசியுள்ளார்.குறிப்பாக இந்திய அணி தடுமாறிய நிலையில் கடைசி ஓவரை மிகச் சிறப்பாக வீசி நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் பிரஸ்வெல்லின் விக்கெட்டை யார்க்கர் மூலமும் வீழ்த்தியுள்ளார்.
இந்த அடிப்படையில் பார்த்தால், பந்துவீச்சிலும் பேட்டிகளும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைக்காது” என வாஷிம் ஜாபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.