பாகிஸ்தான் அணியின் பிரம்மாஸ்திரமான சதாப் கானை, ஹர்திக் பாண்டியா சமாளித்து விடுவார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை நேற்று கோலாகலமாக நடைபெற்றது, இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின, இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை மிக எளிதாக மண்ணை கவ்வவைத்தது
இந்தநிலையில், இன்று நடைபெறும் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் காரணமாக பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, இந்த முறை திருப்பி அடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்களும் அதிக நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.
குறிப்பாக இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா உடல் தகுதி மற்றும் பார்ம் என அனைத்திலும் சிறப்பாக உள்ளதால் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றி அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் கிரிக்கெட் குறித்தான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசிவரும் கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்திக் பாண்டியா நிச்சயம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் சதாப் காணை எளிதாக கையாள்வார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் மஞ்சரிக்கர் பேசியதாவது,“பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா அருமையான ரெக்கார்ட் வைத்துள்ளார். கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் ஹர்த்திக் பாண்டியாதான், அவருடைய அந்த ஆட்டம் கனவை போன்று இருந்தது. இதனால் நிச்சயம் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியிலும் எப்படிப்பட்ட பந்துவீச்சாளரையும் சிறப்பாக கையாள்வார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் சதாப் கானையும் சிறப்பாக கையால்வார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் சதாப் கான் மற்ற விரிஸ்ட்-ஸ்பின்னர் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமானவர். இவருடைய பந்து அதிகமாக டர்ன் ஆகாது ஆனால் அது நம்மளை ஏமாற்றி விடும். மேலும் கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு அனுபவங்களை பெற்றிருக்கும் சதாப்கான் நிச்சயம் இந்திய அணி வீரருக்கு தொந்தரவாக தான் இருப்பார். ஆனால் ஹர்திக் பாண்டியா தற்பொழுது நல்ல பார்மில் இருக்கிறார் இதனால் நிச்சயம் சதாப் கானை ஹர்திக் பாண்டியா சமாளித்து விடுவார்” என்று சஞ்சய் மஞ்சரெக்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.