"சும்மா ஒன்னும் மிஸ்டர் 360 ன்னு தூக்கி குடுக்கல" அவ்ளோ போராடிருக்கேன் - சூரியகுமார் யாதவ் ஓபன் டாக்! 1

வித்தியாசமான ஷாட்கள் அடிக்க பயிற்சியின்போது என்ன நுணுக்கங்களை பயன்படுத்துவேன் என்று தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார் சூரியகுமார் யாதவ்.

டி20 உலக கோப்பைத் தொடரில் விளையாடும் அணிகளில் பயங்கரமான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றாக இருப்பது இந்திய அணி. விராத் கோலி, சூர்யகுமார் யாதவ் தினேஷ் கார்த்திக் என கீழ் வரிசை செல்ல செல்ல இன்னும் கூடுதல் அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர்.

சூர்யகுமார் யாதவ்

குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் இந்திய அணி விக்கெட்டுகள் இழக்கும் பட்சத்தில் மொத்த அழுத்தமும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரர்களுக்குத்தான். இதற்கு முன் நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர்களிலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது.

தற்போது உலககோப்பை தொடரின் போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இது நடந்தது. அப்போது இந்திய அணிக்கு பக்கபலமாகவும் ரன் குவிப்பில் சுணக்கம் இல்லாமலும் பார்த்துக் கொண்டவர் சூரியகுமார் யாதவ். இந்த 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கும். ஏனெனில் 25 போட்டிகளில் கிட்டத்தட்ட 900 ரன்கள் அடித்திருக்கிறார்.

விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்

உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போதும் 25 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இப்படி தொடர்ச்சியாக நல்ல பங்களிப்பை கொடுத்து வருவதற்கு என்ன காரணம் என்னவென்று சமீபத்திய பேட்டியில் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

“நான் பயிற்சியில் ஈடுபடும் பொழுது என் மீது அதிக அழுத்தத்தை எடுத்துக் கொள்வேன். உதாரணமாக சில பந்துகளை குறிவைத்து இவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்று முயற்சிப்பேன். தவறுதலாக நான் ஆட்டம் இழந்து விட்டால் அன்றைய நாளில் அதற்கு மேல் பேட்டை தொடமாட்டேன்.

ஒரு முறை அவுட் என்றால் இன்றைய நாளின் பயிற்சி முடிந்து விட்டது என்று மட்டுமே நினைப்பேன். அதே மனநிலை எனக்கு போட்டியிலும் பிரதிபலிக்கிறது.

சூரியகுமார் யாதவ்

போட்டிகளில் களமிறங்கும் பொழுது நான் என்னென்ன ஷாட்களை வைத்திருக்கிறேனோ, அதை மட்டும் தான் முயற்சிப்பேன். புதிதாக வேறு எதையும் முயற்சிக்க மாட்டேன். போட்டியில் நான் விளையாடுவது அனைத்தும் நான் ஏற்கனவே பலமுறை பயிற்சி செய்த சாட்கள் மட்டுமே.

இந்திய அணியில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரோல் ரொம்ப எளிமையானது. நான் களமிறங்கும் பொழுது இரண்டு விக்கெட் இழந்த பிறகு குறைவான ரன்கள் இருந்தால், அதை மேலே எடுத்துச் செல்வதற்கு விளையாட வேண்டும். அதிக ரன்கள் இருந்தால் அந்த ரன்களை அப்படியே குறையாமல் பார்த்துக்கொள்ள விளையாட வேண்டும். மிகவும் எளியது.

நான் இதுபோன்ற தருணத்தில் ஒருபோதும் எனக்கு தெரியாத ஷார்ட்களை பயன்படுத்தியது இல்லை. என்னிடம் என்ன இருக்கிறதோ, அதை மட்டும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.” என்று எளிமையாக தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *