ஆஸ்திரேலியாவிற்கே இடம் இல்லை... டி.20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகளை தேர்வு செய்த பிரையன் லாரா !! 1
ஆஸ்திரேலியாவிற்கே இடம் இல்லை… டி.20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகளை தேர்வு செய்த பிரையன் லாரா

கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான பிரையன் லாரா எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ளது.

மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி துவங்கும் டி.20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா அணியும் கனடா அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே தற்போது கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவிற்கே இடம் இல்லை... டி.20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகளை தேர்வு செய்த பிரையன் லாரா !! 2

அந்தவகையில், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரும், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானுமான பிரையன் லாரா, டி.20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, ஆஃப்கானிஸ்தா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என கணித்துள்ள பிரையன் லாரா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற வலுவான அணிகளுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே போன்று டி.20 உலகக்கோப்பை  தொடருக்கான இறுதி போட்டியில் இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் என்றும் பிரையன் லாரா கணித்துள்ளார்.

பிரையன் லாராவை போலவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வல்லுநர்கள் என பலரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளில் ஒன்றே சாம்பியன் பட்டம் வெல்லும் என கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, விராட் கோலி, யசஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ்.

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான விண்டீஸ் அணி; 

ரோவ்மன் பவல், அல்ஜாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், சிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், சாய் ஹோப், அகெல் ஹூசைன், சமர் ஜோசப், பிராண்டன் கிங், மோட்டி, நிக்கோலஸ் பூரண், ஆண்ட்ர்யூ ரசல், ரூத்தர்போர்ட், செப்பர்ட்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *