இந்த சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி விளையாடவுள்ளது. இந்நிலையில் டெல்லி வீரரான ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இதனால், ரோகித் சர்மா மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு அளித்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமியும், சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் உள்ளனர். நடுவரிசை பேட்ஸ்மேன்களாக யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் களம் காணுவார்கள்.
ஆல்-ரவுண்டர் இடத்தில் ஹர்டிக் பாண்டியா நீடிக்கிறார். பண்ட் மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. அப்படி இல்லையென்றால், ரஹானே மற்றும் தவான் ஆகியோர் இறங்குவார்கள். இந்த தொடருக்கு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பலம் வாய்ந்த அணியை அனுப்பவுள்ளது.
அதே போல், இந்த தொடருக்கு அணில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்திய அணியை பாருங்கள்: