இந்த மாதம் இறுதியில் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது இதில் இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளும் ஐந்து ஒரு நாள் போட்டிகளும் ஒரு டி 20 போட்டிகளும் இலங்கை மண்ணில் விளையாட உள்ளது.
தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது இதில் ஒரு நாள் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. இன்னும் ஒரு டி 20 போட்டிகள் மட்டும் உள்ளது இது முடிந்த உடன் இந்தியா இந்த மாதம் இறுதியில் இலங்கைக்கு செல்லும்.
இலங்கை இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதியில் துடங்க உள்ளது முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள GICS காலி மைதானத்தில் துடங்கும். இந்த முதல் டெஸ்ட் போட்டி 26 முதல் 30ஆம் தேதிவரையில் நடை பெரும். பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 3ஆம் துடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதியில் முடியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொலோம்போவில் நடைபெறும்.
பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 12ஆம் துடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதியில் முடியும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் நடைபெறும். டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த உடன் இந்தியா இலங்கை ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடும்.
இலங்கை இந்தியா மோதும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் தேதியில் துடங்கி செப்டம்பர் 3ஆம் தேதியில் முடியும். இந்த பொடிகள் இலங்கையில் உள்ள கண்டி கொலோம்போ மற்றும் தம்புல்லா மைதானத்தில் நடக்கும்.
இதற்கு பிறகு இலங்கை இந்தியா மோதும் ஒரே ஒரு டி 20 போட்டிகள் செப்டம்பர் 6ஆம் தேதியில் கொலோம்போ மைதானத்தில் நடைபெறும்.
இலங்கை இந்தியா தொடருக்கான அட்டவணை :
முதல் டெஸ்ட் போட்டி : ஜூலை 26-30, GICS, காலி
இரண்டாம் டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 3-7, SSC, கொலோம்போ
மூன்றாவது டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 12-16, PICS, கண்டி
முதல் ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 20, RDICS, தம்புல்லா
இரண்டாம் ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 24, PICS, கண்டி
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 27, PICS, கண்டி
நான்காவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 31, RPICS, கொலோம்போ
ஐந்தாவது ஒருநாள் போட்டி :செப்டம்பர் 3, RPICS, கொலோம்போ
டி 20 போட்டி : செப்டம்பர் 6, RPICS, கொலோம்போ