Cricket, West Indies, India, T20 Rankings

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் தோல்வி பெற்றதால் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி சரிவை சந்தித்தது. இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 190 ரன் அடித்தது. இந்த சவாலான இலக்கை துரத்தியது வெஸ்ட் இண்டீஸ். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒப்பனர் எவின் லெவிஸ் சதம் அடித்து அசத்தினார். அந்த இன்னிங்சின் போது அவர் 6 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்களை விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்வி பிறகு டி20 அணிக்கான தரவரிசையில் ஒரு இடம் பின்னுக்கு வந்தது இந்தியா. இந்த தோல்வியால் 115 புள்ளிகளுடன் இந்திய அணி 5வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 117 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

மற்றபடி இந்த டி20 அணிகளுக்கான தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. முதல் இடத்தில் நியூஸிலாந்து அணி நீடிக்கையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெவிஸ் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சாமுவேல் பத்ரீ 5வது இடத்திற்கு தள்ள பட்டார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் மாட் வாசிமும், இரண்டாவது இடத்தில் ஜேஸ்ப்ரிட் பும்ராவும் நீடிக்கிறார்கள்.

இதன் பிறகு இலங்கைக்கு செல்கிறது இந்தியா. டெஸ்ட், ஒருநாள், டி20 என நீண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் டெஸ்ட் போட்டியுடன் ஜூலை 26ஆம் தேதி தொடங்குகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *