ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு மிக குறைவான வாய்ப்பே உள்ளது இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. இதற்கான டி20 போட்டிகள் ஜூலை மாதம் துவங்குகிறது.
போட்டிக்கான வீரர்கள் பரிசோதிக்க பட்டு, பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் இந்திய அணி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. இதில் தரவரிசை பட்டியலில் ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்திலும் உள்ளதால், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லை. 2011 ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது.
அதேபோல், ஆஸ்திரேலியா அணியுடனும் 4-0 என்ற கணக்கில் தோற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையில் ஆன இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோற்றது.

இரண்டு வருடங்களாக விராத் கோலி பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. விராத் கோலி தலைமையில், 10 டெஸ்ட் தொடர்களில் 9 தொடர்களை வென்றுள்ளது. அது மட்டுமின்றி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளது.
பாகிஸ்தான் எதிரான தொடரிலும் சொந்தமண்ணில் 1-1 என தடுமாறியது. இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் சில மாதங்களாக சோதப்புகின்றனர். இதனால், இந்திய அணிக்கு சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது. ஆண்டர்சன் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றார்.
அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, வார்னர் ஸ்மித் இருவரும் இல்லாததால் அங்கும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்க படுகிறது.
இது குறித்து ஆஸ்திரேலியா தென்னாப்ரிக்காவுக்கு ஆடிய முன்னாள் வீரர் இயன் சேப்பல் கூறுகையில், இந்திய அணி நல்ல நிலையில் இருந்தாலும், இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். ஒரு சில வீரர்களை தவிர வேறு எவரும் ஜொலிப்பதில்லை. அணியின் வெற்றிக்கு இது போதாது. அனைவரின் ஈடுபாடும் வேண்டும். மேலும், வேகபந்துவீச்சாளர்கள் வேகம் குறித்து கவனம் செலுத்த வெண்டும். இல்லையெனில், விக்கெட்டுகள் எடுத்து நெருக்கடி கொடுக்க முயல்வது கடினம். இதெல்லாம் பார்க்கையில், ஒட்டுமொத்த அணியாக செயல்படவில்லை எனில் வெற்றி பெற குறைவான வாய்ப்பே உள்ளது. என தெரிவித்தார்.
ஜோ ரூட் 4 வது வீரராகவும், பேர்ஸ்டாவ் 5வது வீரராகவும் இறங்க வேண்டும். பட்லர் முதல் இரண்டு இடங்களில் இறங்கினால் எதிரணிக்கு கடினமான போட்டியாக இருக்கும் என தெரிவித்தார்.