கொஞ்சாமாச்சு ரெஸ்ட் கொடுங்க ப்ளீஸ்… பி.சி.சி.ஐ.,யிடம் இந்திய அணி வேண்டுகோள்
கடந்த வருடம் நவம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 24ம் தேதி வரை இலங்கை அணியுடனான தொடரில் விளையாடிய இந்திய அணி, இந்த தொடர் முடிந்த அடுத்த சில தினங்களில் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது.
மொத்தம் 44 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் விளையாடிய இந்திய அணிக்கு, கொஞ்சம் கூட ரெஸ்ட் குடுக்காமல், பி.சி.சி.ஐ., அடுத்த சில தினங்களில் தென் ஆப்ரிக்காவுடனான தொடரை தீர்மானித்தது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
ஒய்வின் தேவையை கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் பி.சி.சி.ஐ.,யிடம் இலங்கை அணிக்கு எதிரான தொடரின் தேதியை ஒத்தி வையுங்கள் அல்லது, இலங்கை அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய அணியின் நிர்வாகம் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிரகாரித்த பி.சி.சி.ஐ., இலங்கை தொடர் முடிந்த அடுத்த மூன்று தினத்தில் இந்திய வீரர்கள் தென் ஆப்ரிக்கா செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
தங்களது அனைத்து கோரிக்கையையும் காதில் கூட வாங்காமல் பி.சி.சி.ஐ., தாண்டோத்தனமாக முடிவு எடுத்து, இந்திய அணியை தென் ஆப்ரிக்காவிற்கு அனுப்பி வைத்ததால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.