மீண்டும் நெ.1 !! இந்தியா கெத்து!!

ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 4-0 என்று முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

கொல்கத்தாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

குல்தீப் யாதவின் ஹாட்ரிக் விக்கெட்டால் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

பின்னர் 4ஆவது போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி மீண்டும் தென்னாபிரிக்கவிடம் முதலிடத்தை இழந்தது. மீண்டும் தற்போது 5ஆவது போட்டியை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியல் :

1.இந்தியா -120 புள்ளிகள்

2.தென்னாப்பிரிக்கா – 119 புள்ளிகள்

3.ஆஸ்திரேலியா – 114 புள்ளிகள்

4.இங்கிலாந்து – 114 புள்ளிகள்

5.நியூசிலாந்து – 111 புள்ளிகள்

6.பாகிஸ்தான் – 95 புள்ளிகள்

7.வங்காள தேசம் – 94 புள்ளிகள்

8.இலங்கை – 86 புள்ளிகள்

9.வெஸ்ட் இண்டீஸ் – 77 புள்ளிகள்

10.ஆப்கானிஸ்தான் – 55 புள்ளிகள்

முதல் இடத்தில் இருந்த தென்னாப்ரிக்காவை விட 3 புள்ளிகள் இந்தியா பின் தங்கியிருந்த நிலையில், இன்றைய வெற்றியின் மூலம் 120 புள்ளிகள் பெற்று இந்தியா தென்னாப்ரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

Rohit Sharma of India plays a shot during the 5th One Day International match (ODI) between India and Australia held at the Vidarbha Cricket Association Stadium in Nagpur on the 1st October 2017
Photo by Arjun Singh / BCCI / SPORTZPICS

ஏற்கனவே, டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டெஸ்ட் போட்டித் தரவரிசைப் பட்டியல் :

1.இந்தியா -125 புள்ளிகள்

2.தென்னாப்பிரிக்கா – 110 புள்ளிகள்

3.இங்கிலாந்து – 105 புள்ளிகள்

4. நியூசிலாந்து – 97 புள்ளிகள்

5.ஆஸ்திரேலியா – 97 புள்ளிகள்

6.பாகிஸ்தான் – 93 புள்ளிகள்

7.இலங்கை – 90 புள்ளிகள் 

8.வெஸ்ட் இண்டீஸ் – 75 புள்ளிகள் 

9.வங்காள தேசம் – 74 புள்ளிகள்

10.ஜிம்பாப்வே – விளையாடவில்லை

 

Editor:

This website uses cookies.