ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பற்றி தேர்வாளர் பிரசாத் விளக்கம்

செப்டம்பர் 17ஆம் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணியை தேர்வு செய்தார்கள். இந்திய அணியை தேர்வு செய்ததை பற்றி, தேர்வாளர் பிரசாத் விளக்கம் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான ஒரு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, கெதார் ஜாதவ், ரஹானே, தோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெறாத முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். அந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இத்தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த போட்டிகளுக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணியை தேர்வு செய்தார்கள். இந்திய அணியை தேர்வு செய்ததை பற்றி, தேர்வாளர் பிரசாத் விளக்கம் கூறினார்.

“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி சுழற்சி கொள்கையின் படி தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கை ஒருநாள் தொடரின் போது அக்சர் பட்டேல் மற்றும் யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோர் சிறப்பாக செயல் பட்டதால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால், அடுத்த வரும் தொடர்களுக்கு இந்திய அணியை பல படுத்த உதவியாக இருக்கும்,” என இந்திய அணியின் தேர்வாளர் எம்.ஸ்.கே. பிரசாத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் மீண்டும் இந்திய அணி பெரிய பெரிய தொடர்களில் விளையாடவுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்து, நான்கு நாட்களில் நியூஸிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. அதன் பிறகு, நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகிறது இலங்கை. இந்த தொடர் முடிந்தவுடன், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட தென்னாப்ரிக்காவுக்கு செல்கிறது இந்தியா.

உள்ளூர் போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் படி விளையாடாத இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா, இன்னும் சில தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது. இதனால், இனி நடக்கும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால், அடுத்த வருடம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா இடம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.