இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ஆன போட்டியில் முதல் இன்னிங்சில் நிதானமான ஆட்டத்தை வேளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்சில் ஒரு சதம் கூட இல்லாமல் முதல் இன்னிங்சில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் டாம் கிரேவேனியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தார்.
ஆப்கானிஸ்தான் இந்தியா இரு அணிகளும் பெங்களூருவில் மோதி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணிக்கு இதுவே முதல் டெஸ்ட் போட்டியாகும். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. துவக்க வீரர்களாக களம் இறங்கிய தவான், முரளி விஜய் இருவரும் சதம் விளாசினார்கள்.
இதில், முரளி விஜய் தனது 12வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 12 சதங்களும் இவர் முதல் இன்னிங்சில் அடித்தது. இரண்டாவது இன்னிங்சில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதன் மூலம், இரண்டாவது இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் இன்னிங்சில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.
இதற்கு முன்பாக டாம் கிரேவேனி மற்றும் பிரின்ஸ் இருவரும் முதல் இடத்தில் இருந்தனர். தற்போது இந்த சத்ததின் மூலம் இவர்களை பின்னுக்கு தள்ளி முரளி விஜய் முதல் இடம் பிடித்தார்.
மேலும், தொடர்ந்து மூன்று போட்டிகளில் சாதம் விளாசிய வீரர்களில் ஷேவாக் க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்து அணியின் அலஸ்டர் குக் தொடர்ந்து 4 சதங்கள் விளாசியுள்ளார்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இதற்கு முன்பாக, முரளி விஜய் இலங்கை அணிக்கு எதிராக 128 மற்றும் 155 ரன்கள் விளாசி இருந்தார். முரளி விஜயின் இரண்டாவது இன்னிங்ஸ் அதிக பட்ச ஸ்கோர் 99 ஆகும்.