Cricket, India, Australia, 3rd T20I

கவுகாத்தியில் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டாவது டி20 போட்டியில் மழையின் தொல்லை இல்லாமல் நல்லபடியாக முடிந்தது, ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் மழை வர வாய்ப்புள்ளது.

ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் பாதித்தது, அதே போல் ஐதராபாத் மைதானத்திலும் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. போட்டியின் போது இடி மின்னல்கள் இருக்கும், மேலும் அந்த நாள் முழுவதும் கனமழை பெய்ய அதிக வாய்ப்பிருக்கிறது என வளிமண்டலவியல் துறையில் இருப்பவர்கள் தெரிவித்தார்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2017: மூன்றாவது டி20 போட்டியில் மழை விளையாட வாய்ப்பு 1

மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மழை வர 40 சதவீதம் வாய்ப்பிருக்கிறது என கணித்துள்ளார்கள். இதனால் 6.30 மணிக்கு தொடங்கவேண்டிய போட்டி தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2017: மூன்றாவது டி20 போட்டியில் மழை விளையாட வாய்ப்பு 2

அதுமட்டும் இல்லாமல் போட்டி நடக்காமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது. 6 மணிக்கு மேல் மழை பெய்ய 34 சதவீதமும், 9 மணிக்கு 37 சதவீதமும், 10 மற்றும் 11 மணிக்கு 47 மற்றும் 51 சதவீதம் மழை வரலாம் என கணித்துள்ளார்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2017: மூன்றாவது டி20 போட்டியில் மழை விளையாட வாய்ப்பு 3

இதனால், மூன்றாவது டி20 போட்டி நடக்குமா நடக்காதா என முடிவெடுப்பது மழையின் கையிலே உள்ளது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால், கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே நட்சத்திர வீரர்களை இழந்தது. இதனால், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 118 ரன் மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை நோக்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலே வார்னர் மற்றும் பின்ச் விக்கெட்டை இழந்தது. ஆனால், ஹென்றிக்ஸ் மற்றும் ஹெட் ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார்கள்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *