அஸ்டோன் அகர் மற்றும் ஆடம் சம்பா ஆகியோர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், இந்தியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் முன்னிலை சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. மெல்போர்னுக்கு பயணம் செய்வதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சம்பா.
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி ஆஸ்திரேலிய அணி இந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற முயற்சிக்கும் நிலையில், ஆடம் சம்பா சொந்த ஊருக்கு திரும்பியதால், ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு அடி விழுந்தது. மூன்றாவது போட்டியின் போது அஸ்டோன் அகருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார். சம்பாவும் இல்லாத காரணத்தினால் பகுதிநேர பந்து வீச்சாளர்களை ஸ்டீவ் ஸ்மித் தேட வேண்டும். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ஆடம் சம்பா உள்ளதால், அந்த தொடருக்கு முன்பு இந்தியாவுக்கு வருவார் என எதிர்பார்க்க படுகிறது.
இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்துவதற்கு முன்பே, இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியது. வெளிநாட்டில் 14 போட்டிகளுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலிய அணி, வெற்றியை தொடர காத்திருக்கிறது. அதே நேரத்தில் ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதல் இடத்திற்கு செல்ல, அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தை பிடித்தது, ஆனால் 4வது ஒருநாள் போட்டியில் தோல்வி பெற்றதால் இரண்டாவது இடத்திற்கு சென்றார்கள்.
இந்திய அணி: விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ரகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி
ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட்டரைட், நாதன் கவுண்டர்-நைல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பின்ச், ட்ராவிஸ் எட், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ்.