இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் ஒருநாள் போட்டி, மும்பையில் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. ஆஸ்திரேலியாவை ஒருநாள் தொடரில் 4-1 என வீழ்த்தியிருக்கும் இந்திய அணி, அதே வேகத்தில் நியூசிலாந்துடனும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நியூசிலாந்து சற்று வித்தியாசமான ஸ்ட்ராடஜியை இந்தியாவுக்கு எதிராக கையாள உள்ளது. அதாவது, இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆட முடிவு செய்து, அதற்கு ஏற்றார் போல், தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதனால், விராட் தலைமையிலான இந்திய அணி சற்று எச்சரிக்கையுடன் ஆடுவது சிறந்தது.
இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் 20 ரன்னிலும், தவான் 9 ரன்னிலும், நியூசி., வேகப்பந்து வீச்சாளர் போல்ட் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கேதர் ஜாதவ் 12 ரன்னில் வெளியேற, இந்திய அணி 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின் கேப்டன் கோலியும், தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும் ‘லைட்வெயிட்’-ஆக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதாவது, ப்ரில்லியன்ட்டான பந்துகளை நிதானமாக தவிர்த்து(லைட்), வாகான பந்துகளை பவுண்டரிக்கு விளாசி (வெயிட்) சிறப்பாக ஆடினர். குறிப்பாக, தனது 200-வது ஒருநாள் போட்டியில் ஆடிவரும் கோலி அரைசதம் அடித்தார்.
ஆனால், 37 ரன்களில் கார்த்திக் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி, 24 ரன்னில் அவுட்டானார்.
ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி, தனது 31-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து ஆடி வருகிறார். இதன்மூலம், 200-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார். முன்னதாக, ஏபி டி வில்லியர்ஸ் தனது 200-வது போட்டியில் சதம் அடித்திருந்தார்.
பின்னர் வந்த பெரிது எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா, ஒரு சிக்சர் மற்றும் ஒரு ஃபோருடன் 16 பந்துகளுக்கு 16 ரன் அடித்து ஒரே மிஸ் டைம் சாட்டில் கேன் வில்லியம்சனின் அற்புதமான கேட்சால் வெளியேறினார்.
பின்னர், வந்த புவனேஷ்வர் குமார் மற்றும் கோலி ஜோடி ஓரளவிற்கு ரன் சேர்க்க இந்திய அணி நல்ல ஸ்கோரை நோக்கி மூன்னேறியது, பின்னர் 125 பந்துகளுக்கு 121 ரன்னுடன் கொலி போல் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் எதிர்பாராத விதமாக ஸ்லோவர் பந்துகளை கணித்து ஆடிய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 15 பந்துகளுக்கு 26 அடித்தார். அவரது இந்த ஆட்டத்தில் 2 ஃபோர் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
இவரது அதிரடி காரணமாக இந்திய அணி 50 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் கோலி 121 ரன்னும் தினேஷ் கார்த்திக் 37 ரன்னும் அடித்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், டி சௌத்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
After 200 games, Kohli has 8888 runs at sn average of 55.55 .
What a brilliant 121 this one was. 280 is a fighting total.#INDvNZ— Virender Sehwag (@virendersehwag) October 22, 2017