பஞ்சாப் மற்றும் சன் ரைசெஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மாவிற்கு அவருடைய நீண்டநாள் தோழியுடன் திருமண நிச்சயம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில சீசன்களாக பஞ்சாப் அணிக்கு ஆடிவந்த சந்தீப் சர்மா தன் சிறப்பான பந்துவீச்சால் கணிசமாக விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார். இவரின் எகானமி ரேட்டும் மிக குறைவே.
இது சன் ரைசெஸ் அணி பயிற்சியாளர்கள் கண்களில் பட 2018ம் ஆண்டு ஐபில் ஏலத்தில் 3 கோடிக்கு எடுத்தது. அந்த அணிக்காக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் மிக குறைவான ரன்களையே கொடுத்திருந்தார்.
2015ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரிலும் இடம் பெற்றிருந்தார். மீண்டும் அணியில் இடம் பிடிக்க மிகவும் போராடி வருகிறார். இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருக்கிறார்.
திருமண நிச்சயம்
25 வயதாகும் சந்தீப் சர்மா சமூக வலைதளத்தில் தனது திருமண நிச்சயம் குறித்து செய்வித்துள்ளார்.
தனது நீண்ட நாள் தோழியான டாசா திருமணம் முடிக்க இருக்கிறார். டாசா நகை வடிவமைப்பாளர் மற்றும் பகுதி நேர எழுத்தாளர்.
சந்தீப் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிலும் அவருக்கு சப்போர்ட் செய்ய மைதானதிர்க்கே வந்துவிடுவது இவரது வழக்கம்.
சிலதினங்களுக்கு முன்பு தான் பஞ்சாப் அணியின் சக வீரரான மயங்க் அகர்வால்க்கு திருமணம் நிச்சயமானது.