மாயன்க் யாதவ், ருத்துராஜ் கெய்க்வாட் வேண்டாம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை தேர்வு செய்த இர்பான் பதான் !! 1
மாயன்க் யாதவ், ருத்துராஜ் கெய்க்வாட் வேண்டாம்… டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை தேர்வு செய்த இர்பான் பதான்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அவரது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்திய அணி இந்த முறையாவது உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்குவதோடு, டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது இந்திய அணியையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

மாயன்க் யாதவ், ருத்துராஜ் கெய்க்வாட் வேண்டாம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை தேர்வு செய்த இர்பான் பதான் !! 2

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதானும், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அவரது இந்திய அணியையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இர்பான் பதான் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோரையும் இர்பான் பதான் தனது அணியில் சேர்த்துள்ளார்.

விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ள இர்பான் பதான், சஞ்சு சாம்சன் அல்லது சுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, பினோய் அல்லது சாஹல் ஆகியோருக்கு இடம் கொடுக்கலாம் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இர்பான் பதான் தேர்வு செய்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி; 

ரோஹித் சர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ராஹ், அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், ரவி பிஸ்னோய்/சாஹல், சுப்மன் கில்/சஞ்சு சாம்சன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *