முந்தைய ஓவரில் கேட்சை விட்டு காப்பாற்றிய வீரரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் ரோகித் சர்மா.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் தற்போது இந்தியா மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் மோதி வருகின்றன. இப்போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆரம்பித்தனர். முதல் ஓவரை தட்டு தடுமாறி விளையாடினார் ராகுல். அதற்கு அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டார்.
மூன்றாவது ஓவரை வங்கதேச நட்சத்திர பவுலர் டஸ்கின் அகமது வீசினார். அப்போது ஸ்கொயர் லெக் திசையில் ரோகித் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க, தவறுதலாக கேட்ச் ஆக முடிந்தது. ஆனால் அந்த கேட்ச்சை இளம் வீரர் மஹ்மூத் தவறவிட்டார். இதனால் ரோஹித் சர்மா நிச்சயம் அதிக ரன்களை அடிப்பார் என்று பலரும் நம்பினார்.
கேட்சை தவற விட்ட அதே வீரர் மஹ்மூத் அடுத்த ஓவரை வீச வந்தார். அப்போது ரோகித் சர்மா எந்தவித தாக்கமும் இன்றி எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். மற்ற அணிகளுக்கு எதிராக சொற்பரன்களில் ஆட்டம் இழந்து தனது மோசமான பார்மை தொடர்ந்து வருகிறார்.
மற்றொரு துவக்க வீரர் ராகுல் தனது பார்மை மீண்டும் பெற்று இருக்கிறார். இவர் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளாக விளாசி வங்கதேச பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 32 பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் விறுவிறுப்பாக 30 ரன்கள் கடந்தார். இவர் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழக்க 16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 137 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடுகிறது. விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் களத்தில் உள்ளனர்.
#Rohitsharma got out again low score 🤕🤕 #BAN #TakshinAhmad pickup A big wicket of rohit sharma #T20WorldCup2022 #INDvBAN pic.twitter.com/Dd8O7cJnUI
— virat Thakur (@IDOLVK18) November 2, 2022