தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10வது தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், கடைசி கட்டத்தை அடைந்தது இந்த ஐபில் தொடர். முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மும்பையில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
அணிகள் விவரம்:
மும்பை இந்தியன்ஸ் – லெண்டில் சிம்மன்ஸ், பார்திவ் பட்டேல், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கிரண் பொல்லார்ட், மிட்சல் மெக்கலனகன், கரண் சர்மா, லசித் மலிங்கா, ஜேஸ்ப்ரிட் பும்ரா.
ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – அஜிங்க்யா ரஹானே, ராகுல் திருப்பதி, ஸ்டீவ் ஸ்மித், எம்.ஸ். தோனி, மனோஜ் திவாரி, டேனியல் கிறிஸ்டின், வாஷிங்டன் சுந்தர், லாக்கி பெர்குசன், ஷர்துல் தாகூர், ஆடம் சம்பா, ஜெயதேவ் உனட்கட்.