இந்தியன் பிரீமியர் லீக் 10-வது தொடரின் இறுதி போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி 3வது முறையாக ஐபில் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில், நாங்க வரோம், ஓரமா நில்லுங்க என சொல்லியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2015-இல் இடைநீக்கம் செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே 2013-இல் நடந்த பெட்டிங் காரணமாக 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஐபில் வரலாற்றில் மிக சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018-ஆம் நடக்கும் ஐபில் தொடர் 10-இல் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு முறை ஐபில் கோப்பைகள் வென்றுள்ள (2010, 2011) மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் வென்றுள்ளன (2010, 2014). இது இல்லாமல், 2008, 2012, 2013, 2015 ஆகிய வருடங்களில் இறுதிபோட்டிகளுக்கு தகுதி பெற்றது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருகையை அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ‘சென்னை அடுத்த வருடத்தில் அங்கே இருக்கும்’ என பதிவிட்டிருந்தது. இங்கே பாருங்கள்:
Next Summer, we will be there! #ManyHappyReturnsOfCSK pic.twitter.com/zkbgzUzchV
— Chennai Super Kings (@ChennaiIPL) May 21, 2017
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பதிலாக உள்ளே வந்த ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த ஐபில்-இல் இருந்து விளையாடாது என ஐபில் தலைவர் ராஜிவ் ஷுக்லா கூறியுள்ளார்.