மும்பை: வரும் 2018ல் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க எல்லா சிக்கல்களையும் நீக்கும் படி சென்னை அணி நிர்வாகத்துக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் நடக்கிறது. இதில் கடந்த 2015ல் நடந்த தொடரில் நடந்த ஸ்பாட் பிக்சிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடைக்காலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளும் மீண்டும் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்க சில சிக்கல்கள் உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதனால் 2018 ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் துவங்கும் இந்த சிக்கல்களை சரி செய்யும்படி அந்த அணி நிர்வாகத்துக்கு பிசிசிஐ., தெரிவித்துள்ளது. அதனால் 2018 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
அதேபோல பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களின் சொந்த மைதானத்தை மாற்ற வைத்துள்ள கோரிக்கையும் பிசிசிஐ., ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து புனே, லக்னோ மைதானங்களில் இந்த அணிகள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.