டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 1
எப்பொழுது : டெல்லி டேர்டெவில்ஸ் – இராஜஸ்தான் இராயல்ஸ், மே 2 இரவு 8 மணியளவில்
எங்கே : பெரோஸா கோட்லா, டெல்லி
வானிலை என்ன : வெப்பமிகுந்ததாக இருக்கும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர் : டெல்லி டேர்டெவில்ஸ் 6 – இராஜஸ்தான் இராயல்ஸ் 11
மைதானத்தில் : டெல்லி டேர்டெவில்ஸ் 3 – இராஜஸ்தான் இராயல்ஸ் 3

டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 2

டெல்லி டேர்டெவில்ஸ் : ப்ரத்வி ஷா, கௌதம் கம்பீர், கிளென் மேக்ஸ்வெல், ஷ்ரியாஸ் ஐயர்(கே), ரிசாப் பன்ட் (வி), டேனியல் கிறிஸ்டியன், ராகுல் டிவாடியா, லியாம் பிளங்குட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ட்ரென்ட் பவுல்ட், ஷாபாஸ் நதேம், கிறிஸ் மோரிஸ் , ஜேசன் ராய், கொலின் முர்ரோ, முகமது ஷமி, விஜய் ஷங்கர், ஹர்ஷால் படேல், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மன், மஞ்சோத் கல்ரா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லேமிச்சேன், நாமன் ஓஜா, சயான் கோஷ்

டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 3

இராஜஸ்தான் இராயல்ஸ் : ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கவுதம், ஷீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனட் காட், பென் லாஃப்லின், டி ஆர்சி ஷோர்ட், ஜோஃப்ரா, ஜான் பட்லர், ராகுல் டிராவிட், அஜிங்கியா ராகேன் (சி), ஹென்ரிக் க்ளாசென், ஆர்ச்சர், தவால் குல்கர்னி, அங்கிட் சர்மா, அனூரித் சிங், இஷ்சோதி, பிரசாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், மஹிபல் லோம்ரோர், ஆரியமன் பிர்லா, ஜடின் சக்ஸேனா, துஷ்மந்தா சமேரா.

டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 4

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 2) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் இராஜஸ்தான் இராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இதுவரை தான் விளையாடிய 8 போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. டெல்லி அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் டெல்லி அணி தொடர்ந்து வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது. டெல்லி அணி இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் இந்த தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. எனவே இராஜஸ்தான் அணி உடனான இன்றைய போட்டி அந்த அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி களமிறங்குகிறது.

டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 5

இராஜஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த அணி இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும். இந்நிலையில் டெல்லி உடனான இன்றைய போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் இராஜஸ்தான் அணி வெற்றிக்கு போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்றைய போட்டி இந்த தொடரில், இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் 2வது போட்டியாகும். முன்னதாக நடந்த முதல் போட்டியில் இராஜஸ்தான் அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 6

டெல்லி மற்றும் இராஜஸ்தான் அணிகள் இதுவரை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாகவே கருதப்படுகிறது.இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின்கீழ் டெல்லி அணியின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. டெல்லி அணியின் சொந்த மைதானத்தில் இந்த போட்டி நடப்பதால் டெல்லி அணியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *