டிரென்ட் போல்ட்
கடந்த ஆண்டு மும்பை அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். மிக சிறப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் பந்து வீசினார். இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பாதி போட்டிகளில் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்ற இருந்தார்.

தற்பொழுது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் இவர் விளையாடுவார் என உறுதியாகக் கூறமுடியாது. ஏனென்றால் ஐபிஎல் போட்டிகள் நடக்க இருக்கின்ற நேரத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் விளையாட இருக்கிறது. எனவே நிச்சயமாக மும்பை அணியில் இவர் கலந்து கொள்ளமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மும்பை அணி இவருக்கு மாற்று வீரராக தங்களது அணியில் இருக்கும் வேறு பந்து வீச்சாளரை வைத்து தான் விளையாட வேண்டி வரும்.