ஜேசன் பெஹ்ரண்டாஃப்
ஜோஷ் ஹசெல்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அவருக்கு மாற்று வீரராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணிக்காக விளையாட ஆசையோடு வந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு விளையாட தயாரானார். ஆனால் இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு போட்டியில் கூட விளையாடாமல் சோகமாக மீண்டும் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார்.

தற்பொழுது நடக்க இருக்கின்ற மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயமாக இவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலிய அணி வீரர்களும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்கிற அடிப்படையில் இவர் நிச்சயமாக விளையாட மாட்டார் என்கிற செய்தி உறுதிகியுள்ளது.