ஐபிஎல் மினி ஏலம் 2023; அதிரடி நாயகன் கிரிஸ் லின்னை எடுக்க காத்திருக்கும் மூன்று அணிகள்
ஐபிஎல் மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் லின்னை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
2017 முதல் 2019 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த கிறிஸ் லின் 2020 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இவருக்கு 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்தது. மேலும் 2021 ஐபிஎல் தொடரில் இவரை ஒரு போட்டியில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட வைக்கவில்லை. அணியில் எந்த ஒரு பயனும் இல்லாததால் மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் இவரை விடுவித்தது.
அதிரடி ஆஸ்திரேலியா வீரரான கிரிஸ் லின் 2022 ஐபிஎல் தொடரில் நல்ல தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரை எந்த ஒரு அணியும் வாங்குவதற்கு முன் வரவில்லை.
ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும் இவர் bbl தொடரில் பங்கேற்று அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் காரணமாக 2023 ஐபிஎல் தொடரில் இவருக்கான மவுஸ் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கிரிஸ் லின்னை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதிரடி துவக்க வீரராக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் இருக்கிறது இதனால் கொல்கத்தா அணி கிரிஸ் லின்னை தேர்ந்தெடுப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
கிறிஸ் லின் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ளதால் நிச்சயம் இவருக்கும் கொல்கத்தா அளிக்கும் ஒத்துப்போகும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.