தோனி விளையாடுவாரா..? சீனியர் வீரர் விலகல்; பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 1
தோனி விளையாடுவாரா..? சீனியர் வீரர் விலகல்; பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான்

பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து, ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இதுவரை 23 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தோனி விளையாடுவாரா..? சீனியர் வீரர் விலகல்; பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 2

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி பந்தில் வெற்றியை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது.

தோனி விளையாடுவாரா..? சீனியர் வீரர் விலகல்; பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 3

முழுங்காலில் ஏற்பட்டுள்ள வலியால் அவதிப்பட்டு வரும் தோனி விளையாடுவதே சந்தேகம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருந்தாலும் சென்னை அணி இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இதனால் தோனி பெங்களூர் அணியுடனான போட்டியில் விளையாடுவார் என்றே தெரிகிறது.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் டெவன் கான்வே, ருத்துராஜ் கெய்வ்காட், சிவம் துபே மற்றும் ரஹானே ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் டூவைன் ப்ரெடோரியஸ், ஜடேஜா மற்றும் மொய்ன் அலி ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. கடந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்ற பந்துவீச்சாளர் மகிலா காயம் காரணமாக இரண்டு வாரங்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தோனி விளையாடுவாரா..? சீனியர் வீரர் விலகல்; பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 4

பந்துவீச்சாளர்கள் வரிசையில் மகேஷ் தீக்‌ஷன்னா, துசார் தேஸ்பாண்டே மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

டெவன் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரஹானே, மொய்ன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), டூவைன் ப்ரெடோரியஸ், மகேஷ் தீக்‌ஷன்னா, துசார் தேஸ்பாண்டே, ஆகாஷ் சிங்.

உத்தேச இம்பாக்ட் வீரர்கள் பட்டியல்;

அம்பத்தி ராயூடு, ஷேக் ரசீத், ராஜவர்தன் ஹங்ரேக்கர், சுப்ரான்சு சேனாபதி, பிரசாந்த் சோலன்கி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *