மொத்தமாக விலகும் ஹர்திக் பாண்டியா...? வசமாக சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி !! 1
மொத்தமாக விலகும் ஹர்திக் பாண்டியா…? வசமாக சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியால் உருவாக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணியே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விடுவித்தது. இதன்பின் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடந்த இரண்டு வருடங்களாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா,  குஜராத் அணிக்கு முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததோடு, இரண்டாவது தொடரிலும் இறுதி போட்டி வரை குஜராத் அணியை அழைத்து சென்றார்.

மொத்தமாக விலகும் ஹர்திக் பாண்டியா...? வசமாக சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி !! 2

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, கேப்டன் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு இந்திய அணியே அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியது. இந்திய அணியின் எதிர்காலமாக ஹர்திக் பாண்டியா பார்க்கப்படுவதால் மீண்டும் ஹர்திக் பாண்டியாவை தனது அணியில் எடுத்து கொள்ள விரும்பிய மும்பை இந்தியன்ஸ் அணி, பல்வேறு சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ட்ரேட் செய்தது.

குஜராத்திடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அவரையே அடுத்த தொடருக்கான தனது கேப்டனாகவும் நியமித்தது.

மொத்தமாக விலகும் ஹர்திக் பாண்டியா...? வசமாக சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி !! 3

மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமான ரோஹித் சர்மா இருக்கும் போதே, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்திருந்தது. அடுத்த தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி எதிர்கொள்ள போகிறது, ரோஹித் சர்மா – ஹர்திக் பாண்டியா இடையேயான புரிதல் எப்படி இருக்கும்..? ரோஹித் சர்மாவின் பங்களிப்பு என்ன..? என மும்பை இந்தியன்ஸ் அணியின் பல கேள்விகளுக்கு இதுவரை பதிலே கிடைக்காமல் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக விலகும் ஹர்திக் பாண்டியா...? வசமாக சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி !! 4

50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர தாமதமாகும் என்பதல் அவர் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவாக வெளியாகியிருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும், இந்த செய்தியை பல்வேறு ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் அது  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *