நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா.... கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்.. மரண மாஸ் காட்டிய தல தோனி; 206 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா…. கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்.. மரண மாஸ் காட்டிய தல தோனி; 206 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 29வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா.... கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்.. மரண மாஸ் காட்டிய தல தோனி; 206 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் – சிவம் துபே ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு பொறுமையாக ரன்னும் சேர்த்தது.

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா.... கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்.. மரண மாஸ் காட்டிய தல தோனி; 206 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 3

கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த டேரியல் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த போது கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

டேரியல் மிட்செல் விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த தல  தோனி, ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி மாஸ் காட்டினார். கடைசி 4 பந்துகளில் தோனி 20 ரன்கள் குவித்ததன் மூலமும், சிக்ஸர் நாயகன் சிவம் துபே கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்துள்ளது.

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா.... கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்.. மரண மாஸ் காட்டிய தல தோனி; 206 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 4

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போன்று ஸ்ரேயஸ் கோபால் மற்றும் கேரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *