மிரட்டல் பந்துவீச்சு... விக்கெட் கீப்பிங்கில் குஜராத் அணியை திணறடித்த ரிஷப் பண்ட்; 89 ரன்களில் ஆல் அவுட்டானது குஜராத் டைட்டன்ஸ் !! 1
மிரட்டல் பந்துவீச்சு… விக்கெட் கீப்பிங்கில் குஜராத் அணியை திணறடித்த ரிஷப் பண்ட்; 89 ரன்களில் ஆல் அவுட்டானது குஜராத் டைட்டன்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 32வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் விக்கெட் கீப்பரான சஹா 2 ரன்னிலும், கேப்டன் சுப்மன் கில் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

ரசீத் கான் (31), சாய் சுதர்சன் (12) மற்றும் ராகுல் திவாடியா (10) ஆகிய மூவரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் 17.3 ஓவரில் வெறும் 89 ரன்கள் மட்ட்மே எடுத்த குஜராத் அணி ஆல் அவுட்டாகியுள்ளது.

பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டெல்லி அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு 2 ஸ்டெம்பிங் மற்றும் இரண்டு மிரட்டல் கேட்ச் பிடித்து அசத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *