பொறுப்புடன் விளையாடிய ஜடேஜா... அதிரடி காட்டிய மொயின் அலி, தல தோனி; 176 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1
பொறுப்புடன் விளையாடிய ஜடேஜா… அதிரடி காட்டிய மொயின் அலி, தல தோனி; 176 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பொறுப்புடன் விளையாடிய ஜடேஜா... அதிரடி காட்டிய மொயின் அலி, தல தோனி; 176 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ரஹானே 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே 3 ரன்னிலும், சமீர் ரிஸ்வி 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

பொறுப்புடன் விளையாடிய ஜடேஜா... அதிரடி காட்டிய மொயின் அலி, தல தோனி; 176 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 3

அடுத்ததாக களத்திற்கு வந்த மொய்ன் அலி 20 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 40 பந்துகளில் 57* ரன்கள் எடுத்து கொடுத்ததன்  மூலமும், மொய்ன் அலி விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த தல தோனி, கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 28* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவித்துள்ளது.

பொறுப்புடன் விளையாடிய ஜடேஜா... அதிரடி காட்டிய மொயின் அலி, தல தோனி; 176 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 4

பந்துவீச்சில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக க்ரூணல் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மாட் ஹென்ரியை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *