ஒரே ஓவரில் 31 ரன்கள்... காட்டடி அடித்து பழைய பார்மிற்கு திரும்பிய ரிஷப் பண்ட்; குஜராத் டைட்டன்ஸிற்கு கடின இலக்கு !! 1
ஒரே ஓவரில் 31 ரன்கள்… காட்டடி அடித்து பழைய பார்மிற்கு திரும்பிய ரிஷப் பண்ட்; குஜராத் டைட்டன்ஸிற்கு கடின இலக்கு

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா (11), ஜேக் (23) மற்றும் சாய் ஹோப் (5) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். அணியின் தேவையை கருத்தில் கொண்டு பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்கு முன்பாக களத்திற்கு வந்த ஆல் ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஒரே ஓவரில் 31 ரன்கள்... காட்டடி அடித்து பழைய பார்மிற்கு திரும்பிய ரிஷப் பண்ட்; குஜராத் டைட்டன்ஸிற்கு கடின இலக்கு !! 2

போட்டியில் முதல் 12 ஓவர்களில் டெல்லி அணி பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும்,அதன்பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன் சேர்த்தது. அக்‌ஷர் பட்டேல் 43 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ஸ்டப்ஸ் – ரிஷப் பண்ட் ஜோடி கடைசி ஓவர்களை மிக சரியாக கையாண்டு அசுர வேகத்தில் ரன்னும் குவித்தது. ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். மோஹித் சர்மா வீசிய போட்டியின் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் சிக்ஸர் பறக்கவிட்டு அதே ஓவரில் டெல்லி அணிக்கு 30 ரன்களும் எடுத்து மொத்தமாக 43 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 88* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 224 ரன்கள் குவித்துள்ளது.

பந்துவீச்சில் குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி ஓவரை வீசிய மோஹித் சர்மா மொத்தமாக 73 ரன்கள் விட்டுகொடுத்து மோசமான சாதனையும் படைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *