தங்களுக்கான அடிப்படை விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய வெளிநாட்டு வீரர்கள்… !! 1
தங்களுக்கான அடிப்படை விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய வெளிநாட்டு வீரர்கள்…

வரும் 2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்கான தங்களது அடிப்படை விலையை வெளிநாட்டு வீரர்கள் பலர் உயர்த்தியுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

தங்களுக்கான அடிப்படை விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய வெளிநாட்டு வீரர்கள்… !! 2

இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான ஏலம்  வரும் 27 மற்றும் 28ம்  தேதி பெங்களூரில் நடைபெற உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் பலர் தங்களுக்கான அடிப்படை விலையை அதிகமாக உயர்த்தியுள்ளனர்.

அடிப்படை விலையை உயர்த்திய வெளிநாட்டு வீரர்கள் பின் வருமாறு;

தைமல் மில்ஸ்;

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த தைமல் மில்ஸை கடந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடருக்காக 12 கோடி கொடுத்து பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.  கடந்த வருடம் 50 லட்சமாக இருந்த தனது அடிப்படை விலையை இவர் தற்போது 1 கோடி ரூபாயாக மாற்றியுள்ளார்.

தங்களுக்கான அடிப்படை விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய வெளிநாட்டு வீரர்கள்… !! 3

கார்லஸ் பார்த்வைட்;

கடந்த 2016ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் விண்டீஸ் அணியின் கேப்டன் பார்த்வைட்டின் அடிப்படை விலை 2016ம் ஆண்டு 30 லட்சமாக இருந்தது. தற்போது டெல்லியில் விளையாடி வரும் இவரை டெல்லி அணி 4.2 கோடி கொடுத்து  விலைக்கு வாங்கியிருந்தது. ஆனால் இவர் இந்த தொடரில் அதிகமாக எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

தங்களுக்கான அடிப்படை விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய வெளிநாட்டு வீரர்கள்… !! 4

முகமது சிராஜ்;

வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் தங்களுக்கான விலையை உயர்த்துவார்களா, நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை போல் சமீபத்திய இந்திய அணி அவ்வப்போது தலை காட்ட துவங்கி இருக்கும் முகமது சிராஜ், கடந்த ஆண்டு தான் ஐ.பி.எல் தொடரில் முதன் முறையாக அறிமுகமானார். இவரை சைன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2. கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறிவிட்ட இவர் தனக்கான அடிப்படை விலையை 20 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய்க்கு உயர்த்தியுள்ளார்.

தங்களுக்கான அடிப்படை விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய வெளிநாட்டு வீரர்கள்… !! 5

இதே போல் வீண்டீஸ் அணியின் லீவிஸும் தனக்கான அடிப்படை விலையை 50 லட்சத்தில் இருந்து 1.50 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார்.

வீரர்கள் இப்படி தடாலடியாக தங்களின் அடிப்படை விலையை உயர்த்தி வருவது அணி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *