ஐ.பி.எல் 2018 ஏலம்… விலை போகாத முன்னணி வீரர்கள்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிங்காக இருக்கும் பல முன்னணி வீரர்களை அவர்களது அடிப்படை விலை கூட கொடுத்து யாரும் வாங்க முன்வராத விநோதம், ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ஏலத்தில் அரங்கேறியது.
உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் ஜனவரி 27 மற்றும் 28ம் தேதி பெங்களூரில் நடைபெற்றது.
இதில் பெயர் தெரியாத இளம் வீரர்களை கூட பல அணிகளும் கோடி கோடியாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தாலும், ஜோ ரூட் , ஹசீம் ஆம்லா போன்ற சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிங்காக இருக்கும் முன்னணி வீரர்கள் பலரை எந்த அணியும் அவர்களது அடிப்படை விலையை கூட கொடுத்து வாங்க முன்வரவில்லை.
அப்படி அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட சில முன்னணி வீரர்கள் பட்டியலை இங்கு பார்போம்.
லசீத் மலிங்கா;
ஒரு காலத்தில் தனது யார்கர் பந்து வீச்சு மூலம் உலக கிரிக்கெட் அணிகளையும் மிரள வைத்தவர் தற்போது தனது அணியில் கூட இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கான விளையாடியுள்ள இவரை இந்த முறை எந்த அணியும் அவரது அடிப்படை விலை கூட கொடுத்து வாங்க முன்வரவில்லை.