கரண் சர்மா ஒரு அணிக்கு போன அந்த அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்.. பரவலான பேச்சுக்கு கரண் சர்மா பதில். 1

ஐபில் தொடரை பொறுத்தவரை ஒரு வீரர் ஒரே அணியில் நிலைத்திருப்பர் என்றால் அது கேள்விக்குறி தான். உரிமையாளரும் பயிற்சியாளரையும் பொறுத்ததே அது. ஐபில் நிபந்தனைப்படி அதிகபட்சம் நான்கு வீரர்களையே தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனால் ஏனைய வீரர்கள் ஏலத்தில் விடப்படுவர்.

இப்படி தான் கரண் சர்மா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அணிக்காக விளையடிக்கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக விளையாடிய சன் ரைஸ் ஹைதராபாத் (2016), மும்பை இந்தியன்ஸ் (2017), சென்னை சூப்பர் கிங்ஸ் (2018) ஆகிய மூன்று அணிகளும் கோப்பை வென்றுள்ளது.

கரண் சர்மா ஒரு அணிக்கு போன அந்த அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்.. பரவலான பேச்சுக்கு கரண் சர்மா பதில். 2

இது மட்டுமின்றி, ரஞ்சி கோப்பையில் இவரது அதிஷ்டம் இவரை விட்டு போவதாக இல்லை. 2017ம் ஆண்டு ரயில்வே அணியிலிருந்து சென்று விதர்பா அணிக்காக விளையாடினார். 2017ம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பையும் அந்த அணி வென்றது.

இதுகுறித்து வெளிநிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கரண் சர்மா ஒரு அணிக்கு போன அந்த அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்.. பரவலான பேச்சுக்கு கரண் சர்மா பதில். 3

இரண்டு வருட தடைக்குப்பின் மீண்டும் வந்து கோப்பையை வென்றது பற்றி…

அளவில்லாத மகிழ்ச்சியளிக்கிறது. அந்த அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் வென்று தந்தது. இதுபோல வேறு எந்த அணியிலும் இந்த அளவிற்கு ரசிகர்களை கண்டதில்லை. வெளி மைதானத்தில் விளையாடும்பொழுதும் மஞ்சள் நிற ஜெர்சிகளையே அதிகமாக காண முடியும்.

பலமுறை வெளியில் உட்காரவைக்கபட்ட போதிலும், எதிர்பாராமல் இறுதிப்போட்டியில் அணியில் இடம் கொடுத்தபோது தயாராக இருந்தீர்களா..

நிச்சயமாக. ஒவ்வொரு வீரரும் இடம்பெறுவது குறித்து யோசிக்காமல் தினமும் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். எந்தநாள் திருப்புமுனையாக அமையும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆம், இப்போட்டியில் ஆடப்போவது பற்றி அன்று காலை தான் எனக்கே தெரியும்.

இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் விக்கெட் எடுத்தது குறித்து…

மிகவும் முக்கியமானது. இறுதி ஒவர்களில் அதிக ரன்கள் எடுக்க முயற்சிப்பார். அதனால் இறங்கி அடிப்பார் என தோன்றியது. அதனால் சற்று அகலமாக வீசினேன் அதேபோல அவரும் இறங்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் அவரை தாண்டி சென்றது தோனி எளிதாக ஸ்டம்பிங் செய்துவிட்டார். இல்லையேல் இன்னும் சில ரன்கள் எடுத்திருப்பார்.

தோனி கேப்டன்ஷிப் குறித்து…

அனைவரும் அறிந்ததே, இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது. பௌலர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பார். எங்களது திட்டங்கள் சோபிக்கமல் போகையில் மட்டுமே கருத்து தெரிவிப்பார். விக்கெட் எடுத்தால் மட்டும் போதும், ரன்கள் விட்டுக்கொடுத்தால் அடித்துக்கொள்ளலாம் என்பார்.

மேலும் அவர், மற்ற அணிகளுக்கு ஆடுவதைவிட சென்னை அணிக்கு ஆடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரிய பலம்.

கரண் சர்மா ஒரு அணிக்கு போன அந்த அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்.. பரவலான பேச்சுக்கு கரண் சர்மா பதில். 4

30வயதாகும் இவர் உள்ளூர் போட்டிகளில் கவங்சம் செலுத்தி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முயற்சி தீவிரமாக செய்வதாக கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *