ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு.. நைசாக நழுவிய விராட் கோலி – இந்திய அணிக்குள் என்ன நடக்கிறது?

ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை இலங்கை அணியுடனான டி20 தொடரில் எடுக்காததன் பின்னணி என்ன? என்பது பற்றி பிசிசிஐ தரப்பிலிருந்து தற்போது தெரியவந்துள்ளது.

ஜனவரி 3ஆம் தேதி துவங்கும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை தனித்தனியாக அறிவித்தது பிசிசிஐ. முன்பு சொன்னதுபோலவே, இம்முறை டி20 அணியில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த வீரர்களை எடுக்கவில்லை. இது தற்காலிகமா? அல்லது நிரந்தரமா? என்பது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

பிசிசிஐ தரப்பிலிருந்து வந்த தகவலின்படி, இது நிரந்தரமான நீக்கம் என்றே தெரிகிறது. ஹர்திக் பாண்டியா இனி டி20 அணிக்கு நிரந்தர கேப்டனாக இருக்கப்போகிறார். 2023 உலகக்கோப்பை முடியும் வரை ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மும்பையில் பிசிசிஐ மேல்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றாக ஹர்திக் பாண்டியாவின் இந்த கேப்டன் நியமனம் இருந்திருக்கிறது.

அதிகாரப்பூர்வமாக, இனிமேல் ஹர்திக் பாண்டியா தான் டி20க்கு கேப்டனாக இருப்பார் என்கிற தகவல் வரவில்லை என்றாலும், மறைமுகமாக ரோகித் சர்மாவிற்கு பிசிசிஐ உணர்த்துவதாகவே தெரிகிறது.

மேலும் ஐபிஎல் தொடர் அறிமுகமான பிறகு இந்திய அணி டி20 உலககோப்பையை வெல்லவில்லை. இது இந்தியா போன்ற அணிக்கு அவமானமாக கருதப்படுவதால், கோப்பையை வென்றாகவேண்டும் என்கிற நோக்கில் இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதன் எதிரொலியாகவே ரோகித் சர்மா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் ருத்துராஜ், சுப்மன் கில், இஷான் கிஷன், சிவம் மாவி ஆகிய வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும், அவருக்கு ஒருநாள் போட்டிகளிலேயே வாய்ப்புகள் கொடுக்கப்படும். டி20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் தொடர்ந்து நீடிப்பார் என்ற தகவல்களும் வந்திருக்கிறது.

இதற்கிடையில், விராட் கோலி தனது சமீபத்திய பெட்டியில், “இனிமேல் எனது கவனம் முழுவதும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இருக்கும்.” என பேசினார். ஒருவேளை, இப்படியெல்லாம் நடக்கும் என்பது அவருக்கு முன்னமே தெரிந்திருக்குமோ என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் பேசி வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.